முன்னோடியான விலங்கினவியலாளரும் வனவிலங்கு ஆர்வலருமான ஜேன் குடால் சமீபத்தில் காலமானார்.
அவர் லண்டனில் பிறந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இறந்தார்.
சிம்பான்சிகளின் பண்புகள், சமூக நடத்தை மற்றும் கருவிப் பயன்பாட்டைக் கவனிப்பதன் மூலம் அவை பற்றிய ஆய்வில் புரட்சியை ஏற்படுத்தினார்.
உலகளவில் வளங்காப்பு, ஆராய்ச்சி மற்றும் அவை குறித்த கல்வியை ஆதரிப்பதற்காக குடால் 1977 ஆம் ஆண்டில் ஜேன் குடால் நிறுவனத்தை நிறுவினார்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அவரது பங்களிப்புகளுக்காக வேண்டி 2025 ஆம் ஆண்டில் U.S. Presidential Medal of Freedom பதக்கம் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றார்.