இந்திய, பிரேசிலிய மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகளுக்கிடையேயான பன்னாட்டுக் கூட்டுக் கடற்பயிற்சியான IBSAMAR-ன் 6வது பதிப்பு தென்ஆப்பிரிக்காவின் சைமோன்ஸ் நகரத்தில் நடைபெற்றது.
இந்த கடற்பயிற்சியின் நோக்கமானது பங்குபெறும் கடற்படைகளுடன் கூட்டுப்பயிற்சியை மேற்கொள்வதையும் இணைந்து பணியாற்றுவதைக் கட்டமைப்பதையும் பரஸ்பர புரிதல்களை ஏற்படுத்துவதுமாகும்.
இந்த IBSAMAR பயிற்சியானது 2006-ல் ஆரம்பிக்கப்பட்டது.
கடைசி பதிப்பான IBSAMAR – Vவது பதிப்பானது 2016-ன் பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோவாவில் நடைபெற்றது. அதற்கு முந்தைய அனைத்துப் பயிற்சிகளும் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றன.