- 5 லட்சம் ஏழை மக்களுக்கு கட்டுமானத் துறையில் திறன்வளர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கழகம் (NAREDCO - National Real Estate Development Council) ஆனது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த கூட்டாண்மையானது நகர்ப்புற ஏழைகளுக்கு தீன்தயாள் அந்த்யோதயா தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் துறையில் திறன்வளர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிறது.
தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கழகம் (NAREDCO)
- இது 1988-ல் தொடங்கப்பட்டு புதுடெல்லியை தலைமையகமாகக் கொண்டது. இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி கொண்ட சுய-கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.
- இது ரியல் எஸ்டேட் துறையில் மிக உயர்ந்த தேசிய அமைப்பாகும்.