இந்தோனேசியாவில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மிகப்பெரிய மனிதாபிமான சமுத்திரா மைத்ரி நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் இந்தியாவிலிருந்து 2 விமானங்கள் மற்றும் 3 கடற்படைக் கப்பல்கள் ஆகியவை நிவாரணப் பொருள்கள் மற்றும் பணியாளர்களுடன் அனுப்பப்பட்டுள்ளது.
C - 130J மற்றும் C - 17 விமானங்கள்
INS திர், INS சுஜாதா மற்றும் INS ஷர்துல்
2018 செப்டம்பர் 28 அன்று இந்தோனோசியாவில் உள்ள மினஹாசா தீபகற்பத்தின் கழுத்துப் பகுதியை 7.5 ரிக்டர் அளவிலான ஆழமற்ற பூகம்பமானது தாக்கியது.
இந்த பூகம்பத்தின் வெளிப்படும் இடமானது (epi centre) மத்திய சுலோவேசியின் மலைப் பிரதேசமான டோங்க்கலா ஆட்சி பகுதியில் அமைந்தது. இதனைத் தொடர்ந்து தலைநகரான பாலு வட்டாரப் பகுதியை சுனாமி தாக்கியது.
2006-ல் இந்தோனோசியாவில் ஏற்பட்ட யோக்யகர்த்தா பூகம்பத்திற்குப் பிறகு ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவேயாகும்.