இமயமலையில் வேட்டையாடும் மற்றும் வேட்டையாடப்படும் விலங்குகளின் தொடர்பு
November 5 , 2026 9 days 119 0
மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கலீலா தேசிய பூங்காவில் அருகிவரும் செந்நிறப் பாண்டாவை (ஐலூரஸ் ஃபுல்ஜென்ஸ்) ஆசிய கருப்பு கரடி (உர்சஸ் திபென்டனுஸ்) வேட்டையாடுவதற்கான முதல் சரிபார்க்கப்பட்ட புகைப்பட ஆதாரத்தை இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
ஆசிய கருப்பு கரடியானது, இமயமலை கருப்பு கரடி அல்லது நிலவுக் கரடி (Moon bear) என்றும் அழைக்கப்படுகிறது.
இது இமயமலை அடிவாரங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ரஷ்ய தூர கிழக்கின் வனப்பகுதிகளில் காணப்படுகிறது.
ஆசிய கருப்பு கரடி IUCN செம்பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக (Vulnerable) வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் செந்நிறப் பாண்டா IUCN செம்பட்டியலில் அருகிவரும் இனமாக (Endangered) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கலீலா தேசிய பூங்கா மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் கிழக்கு இமயமலையில் உள்ள சிங்கலீலா மலையில் அமைந்துள்ளது.
இது 78.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் அதன் மேற்கு எல்லையை நேபாளத்துடன் பகிர்ந்து கொள்கிறது.