இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை
October 7 , 2025 25 days 65 0
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளில் 62 சதவீதம் அதிகரித்து, 2025 ஆம் ஆண்டில் 83 என்ற எண்ணிக்கையினை எட்டியுள்ளது.
வனத்துறையின் வனவிலங்குப் பிரிவு ஆனது 2021 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இவற்றின் கணக்கெடுப்பினை மேற்கொண்டது.
முந்தைய மதிப்பீடுகளை விட 2021 ஆம் ஆண்டில் 51 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கையானது 2025 ஆம் ஆண்டில் 83 ஆக அதிகரித்துள்ளது.
லஹௌல்-ஸ்பிட்டி, கின்னௌர் மற்றும் பாங்கி பள்ளத்தாக்கு ஆகிய பழங்குடியின மாவட்டங்களில் பனிச்சிறுத்தைகள் தென்பட்டன.