ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி மேம்பாட்டு இலக்குகள் தொடர்பாக பல்கலைக் கழகங்களை மதிப்பிடும் ஒரே உலகளாவிய செயல்திறன் அட்டவணை டைம்ஸ் உயர்கல்வி தொடர்பான இம்பாக்ட் (தாக்கம்) என்ற தரவரிசையாகும்.
நிலைத் தன்மையில் சிறந்து விளங்கும் உலகின் 100 முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலுள்ள அம்ரித் விஷ்வ வித்யா பீடமாகும் (81வது இடம்).
பட்டியலின் முன்னணி இடங்களான 100 முதல் 200 வரையிலான கல்வி நிறுவனங்கள் எனும் பிரிவில் இடம் பெற்ற மற்ற இரு இந்திய நிறுவனங்கள், கர்நாடகாவிலுள்ள JSS உயர்கல்வி பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாபிலுள்ள லவ்லி ப்ரொஃபெஷனல் பல்கலைக் கழகம் ஆகியவையாகும்.
உலகளவில், மான்செஸ்டர் பல்கலைக் கழகம், (ஐக்கிய ராஜ்ஜியம்) சிட்னி பல்கலைக் கழகம் (ஆஸ்திரேலியா) மற்றும் RMIT பல்கலைக் கழகம் (ஆஸ்திரேலியா) ஆகியவை முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.
இப்பட்டியலில் 75 கல்வி நிறுவனங்களுடன் அதிக நிறுவனங்களைக் கொண்ட நாடாக ரஷ்யாவும் அதனையடுத்து 73 கல்வி நிறுவனங்களுடன் ஜப்பானும் இடம் பெற்று உள்ளன.