அருணாச்சலப் பிரசேதத்தின் ஜிரோ என்ற பள்ளத்தாக்கில் விளையும், இந்தியாவின் இயற்கைச் சான்றிதழ் பெற்ற ஒரே கிவி வகை பழமானது ஆதி மகோத்சவ் எனப்படும் ஒரு மாபெரும் தேசியப் பழங்குடியினர் திருவிழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திருவிழாவானது புதுடெல்லியிலுள்ள டில்லி ஹாட் (Dilli Hat) எனுமிடத்தில் நடத்தப் படுகிறது.
வடகிழக்குப் பகுதிக்கான இயற்கை மதிப்பீட்டுத் தொடர் மேம்பாட்டுத் திடடத்தின் கீழ் கிவி பழத்திற்கு இயற்கைச் சான்றிதழ் பெற்ற முதல் இந்திய மாநிலம் அருணாச்சலப் பிரதேசமாகும்.
இத்திட்டமானது வடகிழக்கு மாநிலங்களுக்காகத் தொடங்கப்பட்ட மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.