TNPSC Thervupettagam

இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்தவர்களுக்கான நினைவு மற்றும் நல்லிணக்க காலம் 2026 – மே 8 மற்றும் 9

May 13 , 2026 16 hrs 0 min 42 0
  • இந்த அனுசரிப்பு 2004-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
  • இது இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945) உயிர்நீத்த லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வீரர்களை நினைவு கூர்கிறது.
  • மே 8-ஆம் தேதி ஐரோப்பாவின் வெற்றி தினமாக (VE Day) கொண்டாடப்படுகிறது, இது 1945-ஆம் ஆண்டில் நாஜி ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலைக் குறிக்கிறது.
  • இந்த அனுசரிப்பு அமைதி, நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • இரண்டாம் உலகப் போரானது, வருங்காலப் போர்களைத் தடுப்பதற்காக 1945-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்படுவதற்கான சூழலை உருவாக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்