இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் இயங்கும் எத்தனால் ஆலை
August 11 , 2022 1073 days 530 0
ஹரியானாவின் பானிபட் நகரில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை தொழில் நுட்பத்தில் இயங்கும் எத்தனால் ஆலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் டன் நெல் வைக்கோலைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் சுமார் மூன்று கோடி லிட்டர் எத்தனாலை இந்த ஆலை உற்பத்தி செய்யும்.
ஆண்டிற்கு சுமார் 3 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளுக்குச் சமமானப் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வினைக் குறைப்பதில் இந்தத் திட்டம் ஒரு முக்கியப் பங்கினை அளிக்கும்.