இந்திய-அமெரிக்கக் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியான 13வது “வஜ்ர பிரஹார் 2022” பயிற்சியானது இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கியது.
கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு உத்திகள் போன்ற துறைகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இது இரு நாடுகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுக்கு இடையேயான செயல் பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது.
இந்த வருடாந்திரப் பயிற்சியானது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மாற்றி மாற்றி இரு நாடுகளாலும் நடத்தப்படுகிறது.