TNPSC Thervupettagam

எரிசக்தி வளப் பாதுகாப்பு (திருத்தம்) மசோதா 2022

August 11 , 2022 1072 days 1266 0
  • 2022 ஆம் ஆண்டு எரிசக்தி வளப் பாதுகாப்புத் திருத்த மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதா புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான ஆற்றல் மூலங்களின் பயன்பாட்டைக் குறைப்பதையும், புதைபடிமம் சாராத ஆற்றல் மூலங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் புதைபடிமம் சாராத எரிசக்தி வளங்களை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான வழிவகைகளை இந்த மசோதா மத்திய அரசிற்கு வழங்கும்.
  • இதில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் உயிரி எத்தனால் ஆகியவை அடங்கும்.
  • இந்தியாவின் புதைபடிம எரிபொருள் சார்ந்த மின்னாற்றல் பயன்பாட்டை குறைக்கச் செய்வதே இந்த மசோதாவின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
  • இந்தியாவின் கார்பன் சந்தையை வர்த்தகம் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றுவதும், தூய்மையானத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும், மின் திறனை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதே இரண்டாம் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்