மத்திய இரயில்வே துறை அமைச்சர் இந்திய இரயில்வேயின் கோராஸ் (இரயில்வே பாதுகாப்பிற்கான கமாண்டோ) என்ற கமாண்டோப் படையைத் தொடங்கி வைத்தார்.
கோராஸ் என்பது இரயில்வே பாதுகாப்புப் படையின் (Railway Protection Force - RPF) ஒரு தனி கமாண்டோப் பிரிவாகும்.
இவர்கள் இடது சாரி பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், வடகிழக்குப் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் பணியமர்த்தப்பட விருக்கின்றனர். இவர்கள் பயணிகளுக்குப் பாதுகாப்பையும் இரயில்வே அமைப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பையும் அளிக்கவிருக்கின்றனர்.
RPF கமாண்டோக்களுக்குப் பயிற்சியளிக்க மற்றும் நவீனப்படுத்துவதற்காக ஹரியானாவின் ஜகத்கிரியில் ஒரு புதிய கமாண்டோ பயிற்சி மையம் அமைக்கப்பட விருக்கின்றது.