TNPSC Thervupettagam

ஆயுதப் படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள்

August 16 , 2019 2085 days 785 0
  • ஆயுதப் படை மற்றும் துணை இராணுவப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு 132 வீரதீர விருதுகள் மற்றும் இதர விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
  • இந்த விருதுகள் பின்வருமாறு : 2 கீர்த்தி சக்ரா விருதுகள், 1 வீர் சக்ரா விருது, 14 சௌவ்ரிய சக்ரா விருதுகள், 8 பார் சேனா விருதுகள் (வீரதீர), 90 சேனா விருதுகள் (வீரதீர), 5 நாவ் சேனா  விருதுகள் (வீரதீர), 7 வாயு சேனா விருதுகள் (வீரதீர) மற்றும் 5 யுத் சேவா விருதுகளாகும்.
  • மேலும் இவர் இந்தியக் கடலோரக் காவற்படை வீரர்களுக்கு 8 தட்ராக்சக் விருதுகளையும் வழங்கினார்.
  • வீரதீர விருதுகள் ஒரு ஆண்டில் இரண்டு முறை அறிவிக்கப்படுகின்றன. ஒன்று குடியரசுத் தினத்தின் போதும் மற்றொன்று சுதந்திர தினத்தின் போதும் அறிவிக்கப்படுகின்றன.
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தானின் போர் விமானமான F-16ஐ சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கார்கில் போருக்குப் பின்பு இந்திய விமானப் படையின் முதலாவது வீர் சக்ரா விருது இதுவாகும்.
  • பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற தாக்குதலின் போது IAF விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்ட IAF-ன் படைத் தளபதி மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது.
  • போர், மோதல் அல்லது விரோதத்தின் போது அவர்களுடைய தனித்துவமான சேவையை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்