TNPSC Thervupettagam

மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதா, 2019

August 15 , 2019 2085 days 1039 0
  • இது தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியால் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த மசோதா 1988ம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தை சாலைப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு திருத்தம் செய்திட எண்ணுகின்றது.
  • இந்தச் சட்டம் மோட்டார் வாகனங்கள் தொடர்பான உரிமங்கள் மற்றும் அனுமதிகள், மோட்டார் வாகனங்களுக்கான தர நிர்ணயங்கள், இவ்விதிகளை மீறுவதில் அபாராதங்கள் ஆகியவற்றிற்காக அனுமதியை அளிக்கின்றது.

முக்கிய மாற்றங்கள்

  • மத்திய அரசாங்கம் தங்க நேரத்தின் போது சாலை விபத்தில் பலியானவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சைக்காக ஒரு திட்டம் ஒன்றை வடிவமைக்கும்.
  • பயங்கரமான காயத்திற்குப் பிறகு, அதன் காரணமாக மரணம் ஏற்படும் சம்பவத்தைத் தடுப்பதற்காக விபத்து நடந்த பிறகு மிக அதிகபட்சமான செயலாக கருதப்படுகின்ற சரியான மருத்துவச் சிகிச்சையை  கொடுக்க முயல்கின்ற  ஒரு மணி நேரத்தைத் தங்க நேரமாக இந்த மசோதா கருதுகின்றது.
  • இந்த மசோதா வாகனத்தால் தாக்கி விட்டு ஓடிப் போவோர் தொடர்புடைய வழக்குகளுக்காகக் குறைந்த நிவாரணத் தொகையைப் பின்வருமாறு அதிகரிக்கின்றது.
  • ஒருவேளை மரணித்தால் 25000 ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் வரையில்
  • ஒருவேளை மிக மோசமான காயம் ஏற்பட்டால் 12500 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரையில்.
  • இந்த மசோதா இந்தியாவில் சாலையை உபயோகிக்கும் அனைத்துப் பயனாளிகளுக்கும் கட்டாயக் காப்பீட்டு சேவை அளிக்கும் வகையில் ஒரு மோட்டார் வாகன விபத்து நிதியை உருவாக்கிட மத்திய அரசிற்கு அனுமதி அளிக்கின்றது.
  • இந்த மசோதா ஒரு விபத்து நிகழும் சமயத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ அல்லது மருத்துவமல்லாத உதவியை அளிக்கும் நபர்களை ஒரு நல்ல ரட்சகர் என்று வரையறுக்கின்றது.
  • ஒரு வேளை வாகனத்தில் உள்ள ஒரு குறைபாடு சுற்றுச்சூழலிற்கோ, வாகன ஓட்டிக்கோ அல்லது மற்ற சாலைப் பயனாளிக்கோ தீங்கு விளைவித்தால் மத்திய அரசானது  அந்த வகை மோட்டார் வாகனங்களைத் திரும்பப் பெறுவதற்கு ஆணையிட இந்த மசோதா அனுமதி அளிக்கின்றது.
  • திரும்பிப் பெறப்பட்ட வாகனத்தின் உற்பத்தியாளர்கள் கட்டாயம்
    • அவ்வாகனத்தின் மொத்த விலையை வாங்கியவர்களுக்கு திருப்பி அளித்திடவும்
    • அதே வாகனத்தைப் போன்ற அல்லது அதை விட சிறந்த மாதிரியைக் கொண்ட மற்றொரு வாகனத்துடன் குறைபாடு உடைய வாகனத்தை மாற்றித் தரவும் நேரிடும்.
  • மத்திய அரசானது, மாநில அரசுகளின் ஆலோசனையோடு ஒரு தேசியப் போக்குவரத்துக் கொள்கையை வடிவமைக்கலாம்.
  • இந்த மசோதா மத்திய அரசால் ஒரு அறிவிக்கையின் மூலமாக தேசிய சாலைப் பாதுகாப்பு வாரியத்தை அமைத்திட கூறுகின்றது.
  • இந்த மசோதா போக்குவரத்து மரணங்களுக்காக ஒரு வாகன ஓட்டியுடன் தொடர்பு மேற்கொள்ள பயணிகளால் பயன்படுத்தப் படக்கூடிய டிஜிட்டல் இடைத் தரகர்கள் அல்லது சந்தை வளாகங்களைத் திரட்டு நிறுவனங்கள் என வரையறுக்கின்றது. (வாடகை மோட்டார் வண்டி சேவைகள்).

Motor Vehicles (Amendment) Bill: Centre usurping States’ rights, say MPs

  • இந்தத் திரட்டு நிறுவனங்களுக்கு மாநிலத்தால் உரிமங்கள் வழங்கப்படும்.
  • மேலும் அவர்கள் 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்துடன் ஒத்துப் போக வேண்டும்.
  • இந்த மசோதா நிறைய விதி மீறல்களுக்காக இச்சட்டத்தின் கீழ் அபராதங்களின் அளவை அதிகரிக்கின்றது.
  • உதாரணமாக, ஆல்கஹால் அல்லது போதைப் பொருள் ஆகியவற்றை உட்கொண்டு விட்டு வாகனம் ஓட்டினால் அதற்கான அதிகபட்ச அபராதம் ரூ 2,000 முதல் ரூ 10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஒருவேளை வாகன உற்பத்தியாளர் வாகன உற்பத்திக்கான தரங்களுடன் ஒத்துப் போகாத சமயத்தில், 100 கோடி ரூபாய் வரையிலான அபராதமோ அல்லது ஒரு வருட சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அபராதமாக விதிக்கப்படும்.
  • ஒரு வேளை ஒப்பந்ததாரர் சாலை வடிவமைப்புத் தரங்களுடன் ஒத்துப் போகாத சமயத்தில் அபராதமானது ஒரு லட்ச ரூபாய் வரையில் விதிக்கப்படும்.
  • மத்திய அரசானது இச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட அபராதங்களை ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் அளவிற்கு உயர்த்திட முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்