அலுவலர் பதவிக்கு கீழ்நிலையில் உள்ள பணியாளர் பதவிகளான (Personnel Below Officer Rank-PBOR) இராணுவ காவல் துறைப் பிரிவில் மகளிரை இணைப்பது குறித்த முடிவை மத்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த இராணுவ காவல் துறையில் இறுதியில் 20% அளவிற்கு வரிசைப்படுத்தப்பட்ட விகிதத்தில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இதன்படி இராணுவம் வருடந்தோறும் 52 பணியாளர்கள் என்ற அளவில் இராணுவ காவல்துறையில் சுமார் 500 பெண்களை சேர்த்துக் கொள்ளும்.
இராணுவ காவல் துறை என்பது இராணுவ சூழல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக ஒழுங்குமுறைகளை அமலாக்கம் செய்வது மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது ஆகியவற்றிற்கு பொறுப்புடையதாகும்.