முதன்மை ராணுவ சான்றளிப்பு நிறுவனமான, இராணுவ பறத்தல்நிலை மற்றும் சான்றளிப்பிற்கான மையமானது (Centre for Military Airworthiness and Certification-CEMILAC) உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட உயிரி எரிபொருள்களை இராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இந்த அனுமதியினையடுத்து இந்திய விமானப் படையானது தனது போக்குவரத்து விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் உயிரி எரிபொருளை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக இந்திய விமானப்படையின் AN-32 ரக விமானமானது விக் & சட்லஜ் அமைப்புகளில் ('vic' & ‘satluj’ formation) பறந்தது. இந்த பிரம்மாண்ட நிகழ்வின் போது இதன் முன்னணி நடத்துனர் விமானத்திற்கு வழக்கமான எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் கலந்த கலவை பயன்படுத்தப்பட்டது.
இந்த உயிரி எரிபொருள்களானது சத்தீஸ்கரில் ஜத்ரோபா தாவரத்திலிருந்து பெறப்பட்டு டேராடூனில் உள்ள CSIR-IIP இன் (Council of Scientific & Industrial Research - Indian Institute of Petroleum) ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது.