இஸ்ரோவின் சந்திரயான் – 2 மற்றும் நாசாவின் சந்திர ஆய்வுப் பணிக்கான விண்கலம் (LRO)
November 24 , 2021 1363 days 568 0
இஸ்ரோவின் சந்திரயான்-2 மற்றும் நாசாவின் சந்திர ஆய்வுப் பணிக்கான விண்கலம் (LRO - Lunar Reconnaissance Orbiter) ஆகியவை துருவ சுற்றுப்பாதையில் நிலவினைச் சுற்றி வருகின்றன.
இரு விண்கலங்களும் ஒன்றோடொன்று நெருங்கி வந்தன.
சந்திரயான்-2 விண்கலமானது கடந்த 2 ஆண்டுகளாக நிலவைச் சுற்றி வருகிறது.
இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய இரு நிறுவனங்களும் அவற்றினுடைய விண்கலங்கள் மோதிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக ஒரு மோதல் தவிர்ப்பு நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டன.
மோதல் தவிர்ப்பு நடவடிக்கை என்பது, பூமியின் சுற்றுப்பாதையிலுள்ள செயற்கைக் கோள்கள், மற்ற செயற்கைக்கோள்கள் மற்றும் இதர விண்வெளிக் கழிவு சாதனங்கள் உள்ளிட்ட விண்பொருட்களுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்கான ஒரு பொதுவான நடவடிக்கையாகும்.