அருணாச்சலப் பிரதேசத்தின் மெச்சுகாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இஸ்ரோ மற்றும் முஸ்கான் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஒரு விண்வெளி ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளன.
கல்வி அமைச்சர் பசாங் டோர்ஜி சோனாவின் மறைந்த தந்தையை கௌரவிக்கும் வகையில் இந்த ஆய்வகத்திற்குப் பசாங் வாங்சுக் சோனா இஸ்ரோ விண்வெளி ஆய்வகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொலைதூர ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள மாணாக்கர்களுக்கு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நேரடிப் பயிற்சி அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வகமானது, செயற்கைக்கோள் அமைப்புகள், ஏவு கல அறிவியல் மற்றும் விண்வெளி சார் புதுமைகளை ஆராய்வதற்கான செயற்கருவிகளை வழங்குகிறது.
இந்த முன்னெடுப்பானது, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யசாலியில் அமைக்கப் பட்ட அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் விண்வெளி ஆய்வகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.