TNPSC Thervupettagam
August 14 , 2025 14 hrs 0 min 13 0
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது (UNDP) 2025 ஆம் ஆண்டு ஈகுவேட்டர் பரிசினை வென்ற பத்து வெற்றியாளர்களை அறிவித்தது.
  • நீடித்த நிலையான மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மீள்தன்மையை ஆதரிக்கும் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர்ச் சமூகங்களின் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை இந்த விருது கௌரவிக்கிறது.
  • பெண்கள் மற்றும் இளையோர்கள் தலைமையை மையமாகக் கொண்ட, பருவநிலை நடவடிக்கைக்கான இயற்கை என்ற கருத்துருவின் கீழ் வெற்றியாளர்கள் இதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
  • இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்திய அமைப்பு கர்நாடகாவைச் சேர்ந்த பிபிஃபாத்திமா ஸ்வ சஹாய சங்கம் மட்டுமே ஆகும்.
  • இது சிறு தானிய வேளாண் விதை வங்கிகள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் செயலாக்கம் மூலம் 5000 விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது.
  • மற்ற வெற்றியாளர்கள் அர்ஜென்டினா, பிரேசில், ஈக்வடார், இந்தோனேசியா, கென்யா, பப்புவா நியூ கினியா, பெரு மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமூகம் தலைமையிலான பருவநிலை மற்றும் பல்லுயிர்ப் பெருக்க நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்ற அமைப்புகள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்