TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026

August 5 , 2026 3 days 40 0
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 34 லிருந்து 38 ஆக உயர்த்துவதற்கான உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026-ஐ மக்களவை நிறைவேற்றியது.
  • இந்த மசோதா, இந்திய தலைமை நீதிபதியை (CJI) தவிர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்துகிறது.
  • இது உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த அவசரச் சட்டம், 2026-க்கு மாற்றாக 2026 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களால் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நீதித்துறை திறனை மேம்படுத்துவதையும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதையும் இந்த அதிகரிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சட்டமியற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்