TNPSC Thervupettagam

சேவை உற்பத்திக் குறியீட்டின் (ISP) துணைத் துறை அளவிலான சோதனைப் பதிப்பு வெளியீடு

August 5 , 2026 3 days 18 0
  • புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது (MoSPI), நாட்டின் சேவைத் துறையில் உள்ள 19 துணைத் துறைகளுக்கான முதல் சோதனை 'சேவை உற்பத்திக் குறியீட்டை' (ISP) வெளியிட்டுள்ளது.
  • இது தற்போதுள்ள 'தொழில்துறை உற்பத்திக் குறியீட்டிற்கு' (IIP) இணையானதாக அமையும்.
  • முறையான சேவைத் துறையில் நடைபெறும் குறுகிய காலச் செயல்பாடுகளை மாதந்தோறும் அளவிடும் முறையை இது முதன்முறையாக வழங்குகிறது.
  • 2024-25 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட இந்தக் குறியீடு, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளை உள்ளடக்கியதுடன், இந்தியாவின் சேவைத் துறையில் சுமார் 60 சதவீதப் பங்களிப்பைக் கணக்கில் கொள்கிறது.
  • இந்தியாவின் சேவைத் துறையை அளவிடும் முறையை மேம்படுத்துவதும், நாட்டின் புள்ளி விவர அமைப்பை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • சோதனைத் தொடரின் நிலைத்தன்மையை மதிப்பீடு செய்து அதன் வரம்பை விரிவுபடுத்திய பிறகு, முழுமையான சேவை உற்பத்திக் குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது என்பதோடு முதல் கட்டத் தரவுகள் சேவைத் துறையில் பரவலான வளர்ச்சியைக் காட்டுகின்றன.
  • காலப்போக்கில், சுகாதார சேவைகள் மற்றும் குடியிருப்பு உரிமை தொடர்பான வணிகங்கள் போன்ற துறைகளைச் சேர்ப்பதன் மூலம் இந்தக் குறியீட்டின் வரம்பு விரிவுபடுத்தப்படும்.
  • இது பொருளாதாரத்தில் முறையான சேவைத் துறையின் பங்களிப்பில் சுமார் 85 முதல் 90 சதவீதம் வரையிலான வரம்பை எட்டச் செய்யும்.
  • கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 19 துணைத் துறைகளில் 14 துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன; அதேவேளையில், மீதமுள்ள கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் நேர்மறையான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளன.
  • மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக தங்குமிடம் மற்றும் உணவுச் சேவைகள் (37.2 சதவீதம்) மற்றும் சில்லறை வர்த்தகம் (30.8 சதவீதம்) ஆகியவை உள்ளன.
  • தொழில்கள் அல்லது வணிகங்கள் மீது கூடுதல் இணக்கச் சுமையைச் சுமத்தாமல், அரசு அமைச்சகங்கள் மற்றும் ஜிஎஸ்டி (GST) பதிவுகள் உள்ளிட்ட நிர்வாகத் தரவுகளை மட்டுமே பயன்படுத்தி இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி தரவு கிடைக்காத பட்சத்தில், நிர்வாகத் தரவு மற்றும் 'சேவைத்துறை நிறுவனங்களுக்கான வருடாந்திர கணக்கெடுப்பு' (ASISSE) ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்படுகிறது.
  • ISP என்பது ஒரு உற்பத்தி அளவீடு ஆகும்; எனவே, இதை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் 'மொத்த மதிப்பு கூட்டல்' (GVA) உடன் ஒப்பிடக் கூடாது.
  • ஜிஎஸ்டி மற்றும் நிர்வாகத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், ISP தற்போது முறையான துறை சார்ந்த நிறுவனங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.
  • அதன்படி, ISP-ல் சேர்க்கப்படாத சேவைகள் என்பவை, அரசின் முக்கியச் செயல்பாடுகள் தொடர்பானவை அல்லது சந்தை சாராத செயல்பாடுகள் மற்றும் முறைசாராத் துறையின் ஆதிக்கம் கொண்டவையாகும். எனவே, இது சந்தை சாராத அரசு நடவடிக்கைகள், தனிப்பட்ட சேவைகள் மற்றும் முறைசாராத் துறை ஆகியவற்றை விலக்கி வைக்கிறது.
  • நாட்டின் மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பைச் சேவைத் துறை வழங்குகிறது.
  • ISP அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பொருளாதாரம் சார்ந்த சேவை, தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளுக்கும் இனி வழக்கமான மாதாந்திர அல்லது காலாண்டு உற்பத்திக் குறியீடுகள் கிடைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்