TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகள்

November 8 , 2026 6 days 84 0
  • சென்னையில் உச்ச நீதிமன்ற அமர்வை நிறுவக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
  • தென் மாநிலங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் புதுடெல்லிக்குச் செல்வதில் உள்ள சிரமங்களைக் சுட்டிக்காட்டி, 1980 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதன்முதலில் சென்னையில் உச்ச நீதிமன்ற அமர்வை முன்மொழிந்தது.
  • இந்திய அரசியலமைப்பின் 130-வது சரத்தானது, உச்ச நீதிமன்றம் டெல்லியில் அல்லது இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதியால் (CJI) முடிவு செய்யப்படும் பிற இடங்களில் அமரலாம் என்று கூறுகிறது.
  • சரத்து 32 ஆனது அடிப்படை உரிமைகளைச் செயல்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகும் உரிமையை வழங்குகிறது.
  • 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு, பிராந்திய அமர்வுகளை நிறுவுவது குறித்த அதன் முந்தைய முடிவை மாற்றுவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று கண்டறிந்தது.
  • 2016 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று, வி. வசந்தகுமார் மற்றும் எச்.சி. பாட்டியா இடையிலான வழக்கில் இந்த விவகாரம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.
  • முன்மொழியப்பட்ட சென்னை அமர்வு, தென் மாநிலங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்களுக்கான நீதி அணுகலை மேம்படுத்துவதையும் பயணச் செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்