TNPSC Thervupettagam

உச்சநீதிமன்றத்தில் உள்ளக சிந்தனைக் களஞ்சியம்

November 7 , 2018 2458 days 746 0
  • இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் தகவல் உள்கட்டமைப்பை பலப்படுத்த உள்ளக சிந்தனைக் களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றார்.
  • மிக வேகமாக விரிவடைந்து வரும் நீதித்துறையின் அறிவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவின் தலைமை நீதிபதி ஆராய்ச்சி மற்றும் திட்டமிடுதலுக்கான மையத்தின் (Centre for Research and Planning) பணியை மறு வரையறை செய்திருக்கின்றார்.
  • புதிய ஆராய்ச்சி மற்றும் திட்டமிடுதலுக்கான மையம் பின்வருவனவற்றை மேற்கொள்ளும்.
    • தனிச் சுதந்திரமுடைய முன்னணி அறிஞர்களைக் கொண்ட அமைப்பை உருவாக்குதல்.
    • செயல் ஆணைகள், ஆய்வுசார்ந்த விளக்கங்கள் மற்றும் வழக்கு விபரங்கள் மூலமாக நிலையான மற்றும் எளிதில் அணுகக் கூடிய தகுந்த தகவல் களஞ்சியத்தை உருவாக்குதல்.
    • தொழில்நுட்பமற்ற சாதாரண மொழியில் பொது மக்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளின் சுருக்கத்தை தயார் செய்தல்.
    • கொள்கை விளங்கங்கள் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விளக்கக் கூட்டங்கள் நடத்துவது மற்றும் பார் கவுன்சிலின் உறுப்பினர்களை கல்வித் துறையில் உள்ள இளைய உறுப்பினர்களோடு இணையச் செய்வது.
  • இது எவ்வித சார்புமற்ற, அனைத்து முக்கிய கண்ணோட்டங்களையும் அளிக்கக் கூடிய தனிச் சுதந்திரமானதாக இருக்கும். மேலும் இது வெளிப்படைத் தன்மையாக பொது இணைய தளத்தில் பதிவேற்றப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்