மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் “வெள்ள நடவடிக்கை” (Operation Flood) என்பதையொட்டி அமையும் வகையில் பசுமை நடவடிக்கையை (Operation Greens) செயல்படுத்துவதற்கான யுக்திசார் நடவடிக்கையை அங்கீகரித்திருக்கின்றது.
2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு (Tomato, Onion and Potato - TOP) ஆகியவற்றின் உற்பத்தியை சீராக்க ரூபாய் 500 கோடிகள் மதிப்பீட்டில் “பசுமை நடவடிக்கை” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் அறுவடைக்குப் பிறகான இழப்புகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் விவசாயப் பண்ணைத் தொழிற்சாலை, விவசாய தளவாடங்கள் மற்றும் சேமிப்புத் திறன் ஆகியவற்றை உருவாக்கிட எண்ணுகின்றது.
இத்திட்டம் பதப்படுத்தும் திறன்களையும், மதிப்பு கூட்டும் சேவைகளையும் அதிகப்படுத்த உதவும்.
மேலும் இது தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய பயிர்களின் வரத்தை வருடம் முழுவதும் நாடு முழுவதும் விலை ஏற்ற இறக்கம் இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்யவும் எண்ணுகின்றது.