ஓலா போக்குவரத்து நிறுவனம் இந்தியாவின் முதலாவது போக்குவரத்தை எளிமையாக்கல் அட்டவணையை (2018) வெளியிட்டு இருக்கின்றது.
இதன் கணிப்புகளின்படி, கொல்கத்தா நகரம் பொதுப் போக்குவரத்திற்கான வசதி வாய்ப்புகளில் முதலிடத்தில் இருக்கின்றது.
நகரப் போக்குவரத்தின் முக்கிய கூறுகளை அளவிடும் பரிமாணங்கள் மீதான ஆய்வில் 20 நகரங்களைச் சார்ந்த 43000க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து இந்த போக்குவரத்தை எளிமையாக்கல் அட்டவணை (2018) தகவல்களை சேகரித்தது.
இக்கூறின் அடிப்படையில் பொதுப் போக்குவரத்துப் பயன்படுத்துபவர்களில் மாநகரங்களின் மத்தியில் சென்னையில் உள்ள மக்கள் அதிகப்படியாகவும், மும்பையில் உள்ள மக்கள் குறைவாகவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.