இந்தியாவின் முதலாவது கடல்சார் கண்காட்சியகம் மற்றும் கடல்சார் சாகச மையம்
November 6 , 2018 2457 days 754 0
மகாராஷ்டிர அமைச்சரவை கடற்படையிலிருந்து விலக்கப்பட்ட கப்பலான ஐஎன்எஸ் விராட்டை இந்தியாவின் முதலாவது நங்கூரமிடப்பட்ட கடல்சார் அருங்காட்சியகம் மற்றும் கடல்சார் சாகச மையமாக மாற்றுவதற்கு ஒப்புதலளித்துள்ளது.
இந்தியக் கடற்படையைப் பொறுத்த வரையில் இந்தக் கப்பல் உலகின் பழமையான விமானந் தாங்கிக் கப்பலாகும். இது 1986-ல் வாங்கப்பட்டு ஒரு வருடம் கழித்து புனரமைப்பு செய்யப்பட்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது.
பாய்மரக் கப்பல் பயணம் மற்றும் ஆழ்கடல் நீச்சல் அனுபவங்களைத் தரும் வகையில் பல்லுயிர்ப் பெருக்க கண்காட்சி மையங்களையும் கடல்சார் சாகச மையத்தையும் விராட் கொண்டிருக்கும்.