2018 ஆம் அண்டு நவம்பர் 02 அன்று எல் & டி-யின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் வராஹா அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியக் கடலோரக் காவற்படையின் 98 M கடலோர ரோந்துக் கப்பல் வரிசையில் இது நான்காவதாகும்.
ஒருங்கிணைந்த பால அமைப்பு (IBS - Integrated Bridge System), ஒருங்கிணைந்த பணித்தள மேலாண்மை அமைப்பு (IPMS - Integrated Platform Management System), தானியங்கி மின்சார மேலாண்மை அமைப்பு (APMS - Automated Power Management System) மற்றும் உயர் ஆற்றல் கொண்ட வெளிப்புற தீயணைப்பான் அமைப்பு ஆகிய கருவிகளுடன் இந்தக் கப்பல் வடிவமைக்கப்படவிருக்கிறது.