உணவு இழப்பு மற்றும் வீணாதல் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம் 2026 - செப்டம்பர் 29
October 2 , 2026 5 days 55 0
உலகளவில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை (UN) 2019 ஆம் ஆண்டில் இதனை அறிவித்தது.
நிலையான வளர்ச்சி இலக்கு 12-இன் (SDG 12) இலக்கு 12.3 ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் உணவு வீணாவதை பாதியாகக் குறைப்பதையும் உணவு இழப்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உணவு இழப்பு மற்றும் வீணாவதைக் குறைப்பது உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கவும் உதவுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு “Transformative Potential of Reducing Food Loss and Waste” என்பதாகும்.