சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற வேர்ல்ட்ஸ்கில்ஸ் ஷாங்காய் 2026-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பங்கேற்பாளர்கள் 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கான 4 பதக்கங்களை வென்றுள்ளனர்.
பல் சார்ந்த செயற்கை உறுப்புகள்(Dental Prosthetics) பிரிவில் முகமது சலாம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நுண்ணறிவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பப் பிரிவில் ராகுல் கே.பி. சிறப்பான செயல் பாட்டிற்கான பதக்கத்தை வென்றார்.
அலைபேசிச் செயலி உருவாக்கப் பிரிவில் அர்ஜுன் எஸ்.வி. சிறப்பான செயல் பாட்டிற்கான பதக்கத்தை வென்றார்.
பூச்சு மற்றும் உலர் சுவர் அமைப்புகள் (Drywall Systems) மற்றும் நகை தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் ஆகிய பிரிவுகளில் முறையே சுரேந்திரன் எம். மற்றும் ஜாய் தாஸ் ஆகியோர் சிறப்பான செயல்பாட்டிற்கான பதக்கங்களை வென்றனர்.