TNPSC Thervupettagam

உணவு விலைகள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம்

December 13 , 2021 1436 days 739 0
  • 2021 ஆம் ஆண்டின் 11 மாதங்களில், பருவநிலை மாற்றம் காரணமாக சராசரி உணவு விலைகளானது (பணவீக்கத்தை ஈடு செய்த பிறகு) கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகமாக இருந்ததாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.
  • பேரிடர்களின் காரணமாக, உலகம் தனது செயல்திறன்மிக்க பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியில் 4% வரை இழப்பினைக் கண்டு வருகிறது.
  • பருவநிலை மாற்றமானது தீவிரமான மற்றும் ஒழுங்கற்ற வானிலை நிகழ்வுகளைத் தூண்டி, வறட்சி மற்றும் வெப்ப அலைகளை நீட்டிக்கிறது.
  • இது பரவலான அளவில் பயிர்ச் சேதத்திற்கு வழி வகுப்பதோடு, நீண்டகாலப் பயிர் விளைச்சலையும் பாதிக்கிறது.
  • அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட முக்கிய கோதுமை உற்பத்தி நாடுகளில் நிலவும் வறட்சி மற்றும் அதிக வெப்ப நிலை காரணமாக விலை உயர்வைச் சந்தித்துள்ள கோதுமைப் பயிரின் காரணமாக உலகளாவிய உணவு விலையானது உயர்ந்துள்ளது.
  • பெருந்தொற்றானது ஏற்கனவே பல மில்லியன் கணக்காணவர்களை வறுமையின் பிடியில் தள்ளியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு உலகின் ஏழைகளையே இன்னும் அதிகமாக பாதிக்கிறது.
  • உலகிலுள்ள ஒவ்வொரு 3வது நபரும் தனக்குப் போதுமான உணவைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்