TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்புக் குறியீடு

June 9 , 2020 1795 days 639 0
  • இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது இரண்டாவது ‘மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டின்’  முடிவுகளைப் பகிர்ந்து உள்ளது.
  • இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் பெரிய மாநிலங்களிடையே குஜராத் முதலிடத்திலும் ஒன்றியப் பிரதேசங்களிடையே சண்டிகர் முதலிடத்திலும் உள்ளன.
  • இந்தக் குறியீட்டில் சிறிய மாநிலங்களிடையே கோவா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் பெரிய மாநிலங்களிடையே குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் சிறிய மாநிலங்களிடையே கோவாவைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தக் குறியீட்டில் ஒன்றியப் பிரதேசங்களிடையே சண்டிகரைத் தொடர்ந்து தில்லி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவை தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்