முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான O. பன்னீர் செல்வத்திற்கு எதிராகப் போடிநாயக்கனூர் வாக்காளர் தாக்கல் செய்த மனுவை சபாநாயகர் M. அப்பாவு விசாரிக்க உள்ளார்.
இது ஒடிசா சட்டமன்றச் சபாநாயகர் மற்றும் உத்கல் கேசரி பரிதா இடையிலான 2013 ஆம் ஆண்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் மேற்கொள்ளப் பட்டது.
இருப்பினும், இந்த நிலைப்பாடு ஆனது தகுதி நீக்கம் தொடர்பான 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்கு இணங்கவில்லை.
இந்த விதிகள் ஆனது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அத்தகையதொரு மனுவைச் சமர்ப்பிக்க முடியும் என்று வெளிப்படையாகக் கூறுகிறது.
அந்த ஒடிசாவின் வழக்கில் கூட, நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவைத் தாக்கல் செய்வதில் சபை உறுப்பினர் அல்லாத ஒருவர் தலையிட்டு மனு வழங்குவதற்கான உரிமை குறித்து கருத்து எழுப்பப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றம் ஆனது சட்டசபை உறுப்பினர் மட்டுமல்லாமல், ஆர்வமுள்ள எந்தவொரு நபரும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான ஒரு மனுவை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வர உரிமை உண்டு என்று கூறியது.
இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ் சட்டசபை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
தமிழ்நாட்டின் சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், மனுக்கள் மூலம் குறிப்பிடப்பட வேண்டிய குறிப்புகள் என்ற தலைப்பிலான அந்த 6வது விதியானது யார் மனுவை முன் வைக்கலாம் என்பது தொடர்பான காரணிகளைக் கையாள்கிறது.
இதன் துணை விதி (2) ஆனது “ஓர் உறுப்பினர் தொடர்பான மனுவை வேறு எந்தவொரு உறுப்பினரும் சபாநாயகருக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம்.”
இங்கு, வரையறைகள் என்ற தலைப்பிலான (2) து விதியின் படி, “உறுப்பினர்” என்ற சொல் ஆனது “தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்” என்று பொருள்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் ஆனது கடைசியாக 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது.
அப்போதையச் சட்டமன்ற சபாநாயகர் P. தனபால், அ.தி.மு.க. கட்சியின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, அவர்கள் கட்சி உறுப்பினர் பதவியை “தானாக முன்வந்து கை விட்ட” காரணத்திற்காக தகுதி நீக்க நடவடிக்கையினை மேற்கொண்டார்.