TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் உருவாக்க தினம் 2026 - நவம்பர் 09

November 12 , 2026 2 days 52 0
  • உத்தரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2000-இன் கீழ், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • இது ஆரம்பத்தில் உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டது, பின்னர் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அதிகாரப்பூர்வமாக உத்தரகாண்ட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • தனி மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய ராம்பூர் திராகா சம்பவம் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று நடைபெற்றது.
  • இந்த மாநிலப் போராட்டத்திற்கு பெண்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூகக் குழுக்கள் தனி மாநில  அந்தஸ்துக்கு ஆதரவளித்தனர்.
  • கார்வாலி மற்றும் குமாவோனி ஆகியவை இதன் முக்கிய பிராந்திய மொழிகளாகும், மேலும் 'ஐபன்' (Aipan) என்பது குமாவோனின் பாரம்பரிய அலங்காரக் கலையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்