உத்தி சார் வர்த்தக கட்டுப்பாடுகள் குறித்த தேசிய மாநாடு (NCSTC) 2026 புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை வெளியுறவு அமைச்சகத்துடன் (MEA) இணைந்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) ஏற்பாடு செய்தது.
இது இந்தியாவின் உத்தி சார் வர்த்தகக் கட்டுப்பாட்டு அமைப்பில், குறிப்பாக SCOMET (சிறப்பு இரசாயனங்கள், உயிரினங்கள், பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்) கட்டமைப்பில் கவனம் செலுத்தியது.
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இரட்டைப் பயன்பாட்டு மற்றும் உணர்திறன் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதியை SCOMET ஒழுங்குபடுத்துகிறது.
இந்தியாவின் உத்தி சார் வர்த்தகக் கட்டுப்பாட்டு அமைப்பு குறித்த கையேட்டின் மூன்றாவது பதிப்பு இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட்டது.