TNPSC Thervupettagam

இந்திய அஞ்சல் வழியான முதல் ONDC விநியோகம்

January 23 , 2026 4 days 37 0
  • அஞ்சல் துறையானது தனது முதல் இயங்கலை வழி ஆர்டரை டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு (ONDC) மூலம் வெற்றிகரமாக வழங்கியது.
  • இந்திய அஞ்சல் ONDC அமைப்பின் கீழ் ஒரு தளவாடச் சேவை வழங்குநராக (LSP) செயல்பட்டு, அதன் பரந்த நேரடி வலையமைப்பை தொழில்நுட்பம் சார்ந்தத் தளவாட தீர்வுகளுடன் ஒருங்கிணைத்தது.
  • கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட கிராமப்புறத் தொழில்முனைவோரை ஆதரிக்கும் ONDC-இயக்கப்பட்ட UdyamWell முன்னெடுப்பில் இந்த முக்கிய ஆணையை வழங்கியது.
  • இந்த விநியோகமானது, விற்பனையாளர்கள் டிஜிட்டல் முறையில் கைப்பற்றக் கோரி, தளவாடங்களுக்கு இந்திய அஞ்சலைத் தேர்ந்தெடுத்து மற்றும் சரக்குகளை நிகழ் நேரத்தில் கண்காணிக்க இயலும் கிளிக் & புக்’ (சொடுக்குதல் மற்றும் முன்பதிவு செய்தல்) மாதிரியைப் பின்பற்றியது.
  • இந்த ஒருங்கிணைப்பு என்பது டிஜிட்டல் வர்த்தகத் தளங்களில் இயங்குந்தன்மையை மேம்படுத்துவதோடு, நாடு தழுவியச் சந்தைகளுக்கு MSME நிறுவனங்கள் மற்றும் சிறு விற்பனையாளர்களுக்கான அணுகலை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்