TNPSC Thervupettagam

வன வளங்காப்பு வழிகாட்டுதல்கள் 2026

January 23 , 2026 4 days 44 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), வன் (சன்ரக்சண் ஏவம் சம்வர்தன்) ஆதினியம், 1980 சட்டத்தின் கீழ் வன வளங்காப்பு வழிகாட்டுதல்களைத் திருத்தியது.
  • தரமிழந்த வன நிலத்தை மீட்டெடுப்பதில் அரசு சாரா பங்கேற்பை அனுமதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வன நிலத்தில் நடுதல் மற்றும் காடு வளர்ப்பு நடவடிக்கைகள் இப்போது "வனவியல் நடவடிக்கைகள்" என்று கருதப்படுகின்றன என்பதோடு மேலும் இழப்பீட்டுக் காடு வளர்ப்பு அல்லது நிகர தற்போதைய மதிப்பு (NPV) கொடுப்பனவுகள் தேவையில்லை.
  • அரசு சாரா நிறுவனங்கள் மாநில வனத்துறைகளின் அங்கீகரிக்கப்பட்ட பணி அல்லது மேலாண்மைத் திட்டங்களின் கீழ் மறுசீரமைப்புப் பணிகளில் பங்கேற்கலாம்.
  • தோட்டங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வருவாய் பகிர்வு குறித்து மாநிலங்களுக்கு விருப்புரிமை உள்ளது ஆனால் வன உரிமை அரசாங்கத்திடமே உள்ளது.
  • இந்தத் திருத்தம் சுமார் 2.08 லட்சம் சதுர கி.மீ. அளவிலான தரமிழந்தக் காடுகளை மீட்டெடுப்பது, இந்தியாவின் 33% பசுமைப் பரப்பு இலக்கை அடைவது மற்றும் காகிதம் மற்றும் மரக்கன்றுகளை இறக்குமதி செய்வதைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதில் உள்ள அபாயங்களில் ஒற்றைப் பயிர்ச் சாகுபடித் தோட்டங்கள், குறைக்கப்பட்ட பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் காடு சார்ந்தச் சமூகங்களின் ஒதுக்கல் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்