உயர் ஆற்றல் மருத்துவ சைக்ளோட்ரான் திட்டம் - மகாராஷ்டிரா
June 22 , 2026 15 days 119 0
நாக்பூரில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான 'உயர் ஆற்றல் மருத்துவ சைக்ளோட்ரான் திட்டத்திற்கு' (HEMCP) மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறுகிய கால மருத்துவ கதிரியக்க ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்கான உயர்-ஆற்றல் துகள் முடுக்கியை (சைக்ளோட்ரான்) அடிப்படையாகக் கொண்ட ஒரு அணு மருத்துவ வசதியே இந்த திட்டமாகும்.
இந்த கதிரியக்க ஐசோடோப்புகள் PET-CT பிம்பமெடுத்தல், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் இலக்குசார் அணுக்கரு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும்.
இந்த வசதியானது எய்ம்ஸ் நாக்பூர், தேசிய புற்றுநோய் நிறுவனம் (NCI) மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி (GMC) போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும்.
இத்திட்டத்திற்கு 50:50 நிதி மாதிரியின் கீழ் அரசுத் துறைகளால் கூட்டாக நிதியளிக்கப் படுகிறது மற்றும் இது ஒரு பிரத்தியேக சிறப்பு நோக்க வாகன அமைப்பின் (SPV) மூலம் நிர்வகிக்கப்படும்.