TNPSC Thervupettagam

மதியிறுக்க நோய் நினைவு தினம் 2026 - ஜூன் 18

June 22 , 2026 15 days 107 0
  • மதியிறுக்க நோய் பற்றிய புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதலை மேம்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் மதியிறுக்க நோயினை ஒரு நரம்பியல் வேறுபாடாக அங்கீகரிக்கிறது மற்றும் அது ஒரு நோய் அல்ல என்பதை உணர்த்தி, மதியிறுக்க நோய் பாதித்த மக்களிடையே பெருமிதத்தை ஊக்குவிக்கிறது.
  • ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) என்பது ஒரு சிக்கலான நரம்பியல்-வளர்ச்சிக் கோளாறுகளின் தொகுப்பாகும் என்பதோடு இது சமூக தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் தொடர்ச்சியான நடத்தை முறைகளில் உள்ள சிரமங்களால் வகைப்படுத்தப் படுகிறது.
  • ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) என்பது ஒரு வாழ்நாள் நிலைப்பாடாகும், இது பொதுவாக வாழ்க்கையின் முதல் மூன்று ஆண்டுகளில் தோன்றுகிறது.
  • ஆட்டிசத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடையது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Recognition, Representation and Reform என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்