TNPSC Thervupettagam

உயர் கல்விக்கான அகில இந்திய கணக்கெடுப்பு 2023-24

July 14 , 2026 15 days 87 0
  • சமீபத்திய உயர் கல்விக்கான அகில இந்திய கணக்கெடுப்பு (AISHE) 2023-24 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
  • கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களின் சேர்க்கை 42% அதிகரித்துள்ளது. இது 2014-15 ஆம் ஆண்டில் 1.57 கோடியாக இருந்து 2023-24 ஆம் ஆண்டில் 2.24 கோடியாக உயர்ந்து உள்ளது.
  • தற்போதைய மொத்த உயர்கல்வி மாணாக்கர்களில் பெண்கள் 49.7% ஆக உள்ளனர், மேலும் பாலின சமத்துவக் குறியீடு (GPI) 1.08 ஆக உள்ளது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின (ST) சமூகப் பெண்களின் சேர்க்கை முறையே 51.4% மற்றும் 75.7% அதிகரித்துள்ளது.
  • STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பாடப்பிரிவுகளில் பெண்கள் 44% ஆக உள்ளனர், ஆனால் பொது அறிவியலை ஒப்பிடுகையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் (31.1%) பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்