சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது மகாராஷ்டிராவின் நவி மும்பை விமான நிலையத்தை மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட துறைமுகமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பானது 1945 ஆம் ஆண்டு மருந்துகள் விதிகளின் 43A விதியை திருத்தி உள்ளது என்ற நிலையில் இதன் மூலம் இந்தியாவின் அறிவிக்கப்பட்ட மருந்து இறக்குமதி துறைமுகங்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் இந்தியாவில் மருந்துகளின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துகிறது, அதே சமயம் விதி 43A அங்கீகரிக்கப்பட்ட நுழைவுத் துறைமுகங்களை பட்டியலிடுகிறது.
மருந்து ஒழுங்குமுறைக்கான உயர்மட்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவான மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் (DTAB) கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நவி மும்பை விமான நிலையம் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோகச் சங்கிலி மூலம் மருந்துகள், செயல்மிகு மருந்து மூலப்பொருட்கள் (APIs) மற்றும் சுகாதாரப் பொருட்களின் இறக்குமதியை எளிதாக்கும்.