இந்தியாவின் முதல் வணிக அளவிலான உயிரி மூலக்கூறு அடிப்படையிலான ஹைட்ரஜன் ஆலை மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆலையில் ஒவ்வொரு நாளும் 30 டன் உயிரித் தீவனத்தில் இருந்து ஒரு டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும்.
வேட்டோமோ எனர்ஜிஸ் லிமிடெட் மற்றும் பியெசல் கிரீன் எனர்ஜி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த ஆலை அமைக்கப் படுகிறது.
உயிரி மூலக்கூறிலிருந்து ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் உயிரி நிலக்கரி (பயோசார்) ஆகியவற்றை உற்பத்தி செய்யக் கூடிய 'வெப்ப ரீதியில் முடுக்குவிக்கப்பட்ட காற்றில்லா நொதி உலைக்கான' தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.