மத்திய அமைச்சரவை “White goods” (வெள்ளைப் பொருட்கள்) எனப்படும் மின்னணு சாதனங்களுக்கான (குளர்சாதனங்கள் மற்றும் LED பல்புகள்) உற்பத்தி ஊக்குவிப்பு (Production linked Incentive - PLI) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டம் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் எனவும், பெருமளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் எனவும், ஏற்றுமதிகளை கணிசமான அளவில் மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 4% முதல் 6% வரையிலான ஊக்கத் தொகையானது குளிர்சாதனங்கள் மற்றும் LED பல்புகள் போன்றவற்றின் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும்.