TNPSC Thervupettagam

உலக இடம்பெயர்வு அறிக்கை 2022

December 6 , 2021 1443 days 765 0
  • ஐக்கிய நாடுகளின் சர்வதேச  இடம்பெயர்வு அமைப்பானது 11வது உலக இடம்பெயர்வு அறிக்கையினை (2022) வெளியிட்டது.
  • 1970 ஆம் ஆண்டில் உலகளவில் 84 மில்லியனாக இருந்த உலகளாவிய சர்வதேச இடம் பெயர்வானது 2020 ஆம் ஆண்டில் 281 மில்லியனாக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • அதாவது சர்வதேச இடம்பெயர்வின் விகிதமானது உலக மக்கள் தொகையில் 2.3 சதவீதத்திலிருந்து 3.6% ஆக அதிகரித்துள்ளது.
  • மனித மோதல்களை விட பருவநிலை மாற்றமே அதிக மக்களை இடம் பெயரச் செய்து உள்ளதாக 2022 ஆம் ஆண்டு அறிக்கை கூறியுள்ளது.
  • இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
  • வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 18 மில்லியன் மக்களுடன், உலகிலேயே அதிக இடம் பெயர்ந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
  • 2020 ஆம் ஆண்டில் புதிய இயற்கைப் பேரிடர்களால் அதிக எண்ணிக்கையிலான இடம் பெயர்வினை ஆசியா கண்டுள்ளது.
  • சீனாவில் சுமார் 5 மில்லியன் அளவில் இயற்கைப் பேரிடர் காரணமான புதிய இடம் பெயர்வுகள் பதிவாகி உள்ளன.
  • இந்தியாவில் சுமார் 4 மில்லியன் அளவில் இயற்கைப் பேரிடர் காரணமான புதிய இடம் பெயர்வுகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்