TNPSC Thervupettagam

உலக சுகாதார உச்சி மாநாடு 2026

October 19 , 2026 3 days 60 0
  • உலக சுகாதார உச்சி மாநாடானது ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது.
  • "From Crisis to Resilience: Innovating for Health” என்பது இதன் கருத்துருவாகும்.
  • பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் யூரோ மதிப்பிலான திட்டத்தை வங்காள தேசம் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB) அறிவித்துள்ளன, இதன் மூலம் 47 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் ஒரு தசாப்தத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் இறப்புகளை 50% குறைப்பதை இலக்காகக் கொண்டு 100 மில்லியன் டாலர் நிதியுடன், உஸிமா: ஒரு பிரசவ இறப்பு தடுப்புத் திட்டத்தை கேட்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் வெல்கம் லீப் ஆகியவை தொடங்கின.
  • தாய் மற்றும் சேய் சுகாதாரத்தை ஆதரிப்பதற்காக உலகளாவிய நிதியளிப்பு வசதி (GFF) மூலம் 10 மில்லியன் யூரோக்களை ஜெர்மனி உறுதியளித்துள்ளது.
  • செயற்கை நுண்ணறிவின் (AI) தவறான பயன்பாடு, அணுக்கரு போர், அறிவியலில் குறைந்து வரும் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் உணர்ச்சிபூர்வமான நல்வாழ்வு ஆகியவை குறித்த முக்கிய விவாதங்கள் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்