TNPSC Thervupettagam

உலக தோல் நிறமி இழப்பு நோய் தினம் 2026 - ஜூன் 25

June 26 , 2026 2 days 26 0
  • வெண்புள்ளி மற்றும் அப்பிரச்சனையுடன் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வெண்புள்ளி/தோல் நிறமி இழப்பு என்பது மெலனோசைட்டுகள் (மெலனின் நிறமியை உற்பத்தி செய்யும் செல்கள்) அழிக்கப்படுவதால் தோலில் வெள்ளை நிறத் திட்டுக்களை ஏற்படுத்தும் ஒரு தோல் குறைபாடாகும்.
  • முதல் உலக தோல் நிறமி இழப்பு தினமானது விடைலிகோ ரிசர்ச் ஃபவுண்டேஷன்  மற்றும் விடைலிகோ சப்போர்ட் அண்ட் அவேர்னஸ் ஃபவுண்டேஷன் ஆகியவற்றால் 2011 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • வெண்புள்ளி/தோல் நிறமி இழப்பு நோயால் பாதிக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் நினைவு நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 25-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு From Stigma to Strength என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்