2026 ஆம் ஆண்டு மே 22 அன்று நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் (MHA) கூட்டத்தின் போது, லடாக்கிற்கு சரத்து 371-இன் கீழான அரசியலமைப்புப் பாதுகாப்புகள் குறித்த விவாதங்களை மத்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தியது.
சரத்து 371 இந்திய அரசியலமைப்பின் XXI-வது பகுதியின் கீழ் வருகிறது; இது சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது.
இக்கூட்டத்தில் லடாக் உயர் அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சரத்துகள் 371A (நாகாலாந்து), 371F (சிக்கிம்) மற்றும் 371G (மிசோரம்) ஆகியவை நிலம், கலாச்சாரம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் பிராந்தியம் சார்ந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பிற்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று லடாக் ஒரு ஒன்றியப் பிரதேசமாக மாறியது.
லடாக்கிற்கான சட்டமன்ற, நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புக்கான முன்மொழிவுகளும் இவ்விவாதங்களில் அடங்கும்.