கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற 6-வது உலக நாடோடி விளையாட்டுகளின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டார்.
நாடோடி மக்களின் மரபுகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக 2012 பிஷ்கெக் பிரகடனத்தின் மூலம் உலக நாடோடி விளையாட்டுகள் (WNG) நிறுவப்பட்டு, முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு விளையாட்டுகளில் கோக் போரு, குராஷ், கோரேஷ், மங்கோல் போக், வில்வித்தை மற்றும் டோகுஸ் கோர்கூல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.
போலோவைப் போன்ற பாரம்பரிய கிர்கிஸ் குதிரையேற்ற விளையாட்டான கோக் போரு, 2017 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரிக்கப் பட்டது.
உலக நாடோடி விளையாட்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகின்றன.