சர்வதேச நீர்மின் சங்கம் (IHA) வெளியிட்ட உலக நீர்மின் ஆற்றல் கண்ணோட்டம் 2026 அறிக்கையானது, இதுவரை இல்லாத அளவில் அதிகப்படியான பம்ப்/நீரேற்றம் செய்யப் பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உள்ளது.
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய பம்ப்/நீரேற்றம் செய்யப்பட்ட சேமிப்புத் திறன் முதன்முறையாக 200 ஜிகாவாட்டைத் (GW) தாண்டிய நிலையில் இதன் மூலம் இதுவே உலகின் மிகப்பெரிய நீண்ட கால ஆற்றல் சேமிப்பு ஆதாரமாக உருவெடுத்து உள்ளது.
பம்ப்/நீரேற்றம் செய்யப்பட்ட நீர்மின் சேமிப்பு (PHS) என்பது, வெவ்வேறு உயரங்களில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களுக்கு இடையே தண்ணீரை பம்ப்/நீரேற்றம் செய்வதன் மூலம் மின்சாரத்தை சேமிப்பதையும், தேவைப்படும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதை வெளியேற்றுவதையும் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் இந்தியா 4 ஜிகாவாட்டிற்கும் அதிகமான நீர்மின் திறனைச் சேர்த்துள்ளதன் மூலம் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி, நிறுவப்பட்ட நீர்மின் திறனில் உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.
இந்தியாவின் பம்ப்/நீரேற்றம் செய்யப்பட்ட சேமிப்பு திறன் 288 ஜிகாவாட்டாக மதிப்பிடப் பட்டுள்ளதுடன் இது 2035-36 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் என்ற இலக்கைக் கொண்டுள்ள நிலையில் தற்போது, சுமார் 7.425 ஜிகாவாட் திறன் கொண்ட 10 திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன.