இந்தக் குறியீடானது ‘கன்சர்ன் வேர்ல்டுவைட்’ என்ற அயர்லாந்து நாட்டு உதவி வழங்கும் நிறுவனம் மற்றும் “வெல்த் ஹங்கர் ஹில்ஃப்” (Welt Hunger Hilfe) என்ற ஜெர்மானிய நாட்டு நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
இந்தக் குறியீடானது இந்தியாவில் நிலவும் பட்டினி நிலையானது கவலைக் கிடமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குறியீட்டில், 116 நாடுகளில் இந்தியா 101வது நிலையில் உள்ளது.
2020 ஆம் ஆண்டில் இந்தியா இக்குறியீட்டில் 91வது இடத்தில் இருந்தது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றுதல் போன்ற குறிகாட்டிகளில் இந்தியாவின் நிலை மேம்பட்டுள்ளது.